Asianet News TamilAsianet News Tamil

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை... இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

srilankan court orders that release of 55 tamilnadu fishermen
Author
Sri Lanka, First Published Jan 25, 2022, 5:22 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

srilankan court orders that release of 55 tamilnadu fishermen

ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே 55 தமிழக மீனவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். மேலும் அவரும் மீனவர்களின் விடுதலைக்கு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios