கிராமங்களில் உள்ள குழந்தைகள், பதின்வயது சிறுவர்கள் வீட்டை வெளியே சென்று ஓடி ஆடி உடல்ரீதியான் விளையாட்டுகளை அதிகமாக ஆடுவதால் அவர்களது உடல்ரீதியாக இயல்பாகவே வலுவாகவுள்ளனர். ஆனால் பெரிய பெரிய நகரங்களில், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வளரும் குழந்தைகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும், வெளியே சென்று விளையாடக்கூடிய வாய்ப்புகள் இல்லை; அதற்கான இட வசதியும் இல்லை. 

அதனால் குழந்தைகளும் சிறுவர்களும், பெரும்பாலான நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருந்து செல்ஃபோன்களிலும் லேப்டாப்பிலும் வீடியோ கேம்களுமே ஆடுகின்றனர். அதனால் உடல்ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. 

இந்த மாதிரி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சியளிக்கும் மற்றும் விளையாடுவதற்கான வாய்ப்புகளையும் சூழல்களையும் அமைத்து கொடுக்கும் அமைப்புகள் மிகமிகக்குறைவு. 

இதை அறிந்த ஏசியாநெட் நியூஸின் முன்னாள் சி.இ.ஓ அமித் குப்தா, upUgo என்ற அமைப்பை பெங்களூருவில் தொடங்கி, அதன்மூலமாக குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் தனித்தனி ட்ரெய்னர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியளித்துவருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த upUgo மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால், இதன் நோக்கமும் செயல்பாடும் சரியானதாகவும் சிறப்பானதாகவும் இருந்ததால் நிறைய சிறுவர்கள் அங்கு சேர்ந்து விளையாட்டு பயிற்சி பெற ஆரம்பித்தனர்.

upUgo மூலம் ஆரோக்கியமான ஃபிட்னெஸான சிறுவர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கிய அமித் குப்தா, ஆரம்பகட்டத்திலேயே அதில் வெற்றியும் கண்டார். இந்த அமைப்பிற்கு மக்களின் ஆதரவும் இருந்ததால் அதிகமான சிறுவர்கள் சேர தொடங்கினர். குழந்தைகள், சிறுவர்கள் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த நிலையில், கொரோனா வந்து இதற்கு தடைபோட்டது. 

கொரோனா ஊரடங்கால் யாருமே வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளதால், குழந்தைகளூம் சிறுவர்களும் வெளியே வந்து விளையாட முடியாத சூழல் உள்ளது. அதனால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் கொரோனா ஏற்படுத்த தடையால், upUgo சோர்ந்துவிடவில்லை. தங்களது வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலேயே இருந்து, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் தொடர்ந்து விளையாட்டு பயிற்சியளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பயிற்சியளித்துவருகிறது. 

ஊரடங்கால் சிறுவர்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில் ஆன்லைனிலேயே லைவ் செசன்கள், zoom செசன்கள் மூலம் பயிற்சியளித்துவருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் மூலம் தங்களது பணியை தொடர்வதால் சிறுவர்கள் வழக்கம்போலவே ஊரடங்கு சமயத்திலும் உற்சாகமாக, தங்களது ஃபிட்னெஸில் கவனம் செலுத்தும் வகையில் விளையாட்டு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். 

upUgo.in மூலம் ஆன்லைனில் பயிற்சியளிப்பதால், இப்போது பெங்களூருவை கடந்து நாடு முழுவதிலும் பல ஊர்களை சேர்ந்த சிறுவர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது.