சோனியா காந்தியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்… டிவிட்டரில் கட்சி நிர்வாகிகள் இரங்கல்!!
காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நலக் குறைவால் காலமானார்.
காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இதையும் படிங்க: ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி - சத்குரு
இதுக்குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ, கடந்த ஆக.27 ஆம் தேதி சனிக்கிழமையன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மரத்தில் கட்டிவைத்து ஆசிரியருக்கு அடி, உதை: தேர்ல் தேர்ச்சியடைய வைக்காததால் மாணவர்கள் ஆத்திரம்
இதை அடுத்து பலர் டிவிட்டரில் காங்கிரஸ் தலைவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸை சேர்ந்த நீரஜ் குந்தன், தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.