Asianet News TamilAsianet News Tamil

மரத்தில் கட்டிவைத்து ஆசிரியருக்கு அடி, உதை: தேர்வில் தேர்ச்சியடைய வைக்காததால் மாணவர்கள் ஆத்திரம்

மதிப்பெண் குறைவாக அளித்த ஆசிரியர், கிளார்க் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து, 11 மாணவர்கள் வெளுத்து வாங்கிய சம்பவம் நடந்துள்ளது

In Jharkhand, a teacher and a clerk were beaten by students for giving poor grades.
Author
First Published Aug 31, 2022, 5:10 PM IST

மதிப்பெண் குறைவாக அளித்த ஆசிரியர், கிளார்க் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து, 11 மாணவர்கள் வெளுத்து வாங்கிய சம்பவம் நடந்துள்ளது

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிக்கூடத்தில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது.

பழங்குடியினருக்கா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள்தான் இந்த கொடூரமான செயலைச் செய்துள்ளனர். 

flood in pakistan: பரிதாபத்தில் பாகிஸ்தான்! 6.50 லட்சம் கர்ப்பிணிகளுக்கு உணவு,மருந்து தேவை: ஐ.நா. கோரிக்கை

இதுகுறித்து கோபிகந்தர் காவல் அதிகாரி கூறுகையில் “ பழங்குடியின மாணவர்களுக்கான அரசுப்பள்ளியில் தேர்வு நடந்து மதிப்பெண் தரப்பட்டுள்ளது. இதில் 9ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 11 பேரை கணித ஆசிரியர் தேர்ச்சி அடையவைக்காமல் பெயில் ஆக்கிவிட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த 11 மாணவர்களும் கணித ஆசிரியரை தாக்கியுள்ளனர். மாணவர்களின் மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவிட்ட கிளார்க்கையும் தாக்கியுள்ளனர். இருவரையும் மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் தாக்கியுள்ளனர். 

elon musk: twitter: tesla: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்

இந்த சம்பவம் குறித்து பள்ளிநிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டாலும், மாணவர்கள் எதிர்காலம் கருதி முதல்தகவல் அறிக்கை ஏதும்பதிவு செய்யப்படவில்லை. பள்ளிநிர்வாகமும் எழுத்துப்பூர்வமாக புகார் ஏதும்முதலில் தரவில்லை பின்னர் விசாரித்தபின் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.

ஆனால், மாணவர்கள் எதிர்காலம் கருதிபுகார் வாபஸ் பெறப்பட்டது. காயமடைந்த ஆசிரியர் பெயர் சுமன் குமார், கிளார்க் பெயர் சோனேராம் சாரே. இவரும் மாணவர்கள் மீது எந்தப் புகாரும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்

கோபிகந்தர் மண்டல மேம்பாட்டு அதிகாரி ஆனந்த் ஜா கூறுகையில்  “ இந்த சம்பவத்தில் இந்த 11 மாணவர்கள் மட்டுமின்றி ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. காயமடைந்த ஆசிரியர் இதற்கு முன் பள்ளியின் தலைமைஆசிரியராக இருந்துள்ளார். ஆனால், சில காரணங்களுக்காக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஆசிரியர்களுக்கு இடையே பழிவாங்கும் திட்டமாக இருக்கலாம். பள்ளியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அவசியம். 9 மற்றும் 10ம்வகுப்புகள் இரு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள்  அவர்கள் வீட்டுக்கு செனறுவரக் கூறியுள்ளோம். 

அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி

மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் செய்முறைத் தேர்வில் ஆசிரியர் குறைவான மதிப்பெண் வழங்கியதால்தான் தேர்வில் தோல்விஅடைந்ததாகத் தெரிவித்தன்ர. இந்த மதிப்பெண்களை கிளார்க் பதிவேற்றியுள்ளார். மாணவர்கள் எழுத்துத் தேர்வில் தோல்வி அடைந்தார்களா அல்லது செய்முறைத் தேர்வில் தோல்விஅடைந்தார்களா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios