மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி.. 4ம் தேதி நடைபெறும் பேரணியில் ராகுல் பங்கேற்பாரா?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்கின்றனர்.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எப்படியாவது இந்த முறை விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை நடத்துகிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளிநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- rahul: ராகுல் காந்தி தமிழகத்தில் யாத்திரை: ஸ்ரீபெரும்பதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு செப்டம்பர் 7ல் வருகை
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். இந்தியா திரும்பும் முன் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் பயணம் செய்ய உள்ளனர்.
செப்டம்பர் 4ம் தேதியன்று புதுடெல்லியில் நடைபெறும் காங்கிரஸின் மெஹங்காய் பர் ஹல்லா போல் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளார். சோனியா காந்தி வெளிநாடு செல்லும் தேதி குறித்தோ அல்லது இடம் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பர் 4ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பேரணியில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- டிக் டாக் முதல் பிக் பாஸ் வரை.. கோவாவில் மர்ம மரணம் - யார் இந்த சோனாலி போகத் ?