rahul: ராகுல் காந்தி தமிழகத்தில் யாத்திரை: ஸ்ரீபெரும்பதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு செப்டம்பர் 7ல் வருகை
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7ம்தேதி ஸ்ரீபெரும்பதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கன்னியாகுமரியிலிருந்து பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7ம்தேதி ஸ்ரீபெரும்பதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கன்னியாகுமரியிலிருந்து பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.செல்வப்பெருந்தகை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7ம் தேதி ஸ்ரீபெரும்பதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வருகிறார்.
குஜராத்தில் போதை மருந்து தொழில் எளிதாகச் செய்யலாம்: பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
அங்கு ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தியானம் செய்கிறார். பின்னர் வழிபாடு செய்துவிட்டு, அவரின் தந்தயின் நினைவிடத்தில் ஆசிபெற்று, யாத்திரையைத் தொடங்க உள்ளார்.
அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்திரை” யை தொடங்குகிறார். இந்த யாத்திரை செப்டம்பர் 10ம் தேதிவரை நடக்கும். ராகுல் காந்தி வருகையையொட்டி ஸ்ரீபெரும்பதூரில் ராகுல்காந்தியின் பாதுகாவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி வருகையையொட்டி, விரிவான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. தேசப்பற்றினை தூண்டிடும் வகையில் தேசியக் கொடியை அடிப்படையாக வைத்து பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடிக்கு நெருக்கடி: டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் 4 நாட்கள் நடக்கும் யாத்திரை செப்டம்பர் 7ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடக்கும். தமிழகத்தில் ராகுல் காந்தி யாத்திரை முடிந்த மறுநாள் அண்டை மாநிலமான கேரளாவில் தொடங்கும்.