நான் டெல்லியில்தான் இருக்கிறேன்; எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள்? மணீஷ் சிசோடியா டுவிட்டர் பதிவு!!

''நான் டெல்லியில்தான் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன். இது என்ன வித்தையாக இருக்கிறது மோடிஜி அவர்களே'' என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுத்து இருப்பதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

I am roaming freely in Delhi what is this gimmick modi ji asks Manish Sisodia

டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து சிபிஐ டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது. டெல்லியில் இருந்து தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் வரை விசாரணை நீண்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. அதன்படி அமலாக்கத்துறை தற்போது, சிபிஐயிடம் விசாரணை குறித்த விவரங்களை கேட்டு அறிந்துள்ளது. பண பரிமாற்றம் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. இதை முன்னிட்டு மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பதிவில், ''உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தன, எதுவும் கிடைக்கவில்லை... இப்போது மணீஷ் சிசோடியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லுக்அவுட் சநோட்டீஸ் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது என்ன வித்தை மோடி ஜி... நான் டெல்லியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? தயவு செய்து எங்கே வரவேண்டும் என்று சொல்லுங்கள். இது என்ன வித்தையாக இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற 13 பேருக்கும் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

சிபிஐ விசாரணையில்...

* டெல்லி கலால் வரிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணையை சிபிஐ சனிக்கிழமை துவங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 பேரின் வாக்குமூலங்கள் சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.  

* முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் 15 பேரில் ஒருவரான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

சிபிஐ ரெய்டுக்கு பயப்படாத ஆம் ஆத்மி.. குஜராத்துக்கு ஸ்கெட்ச் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - அடேங்கப்பா !

* சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் மணீஷ் சிசோடியாஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிசி சட்டத்தின் கீழ் 120பி பிரிவின் கீழும் (குற்றச் சதி) மற்றும் 477ஏ ​​(கணக்குகளில் முறைகேடு செய்தல்) ஆகியவற்றின் கீழும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. 

* குற்றம் சாட்டப்பட்ட மூவர் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர், அங்கு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நிதி ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

* ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த பின்னர்,  குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முடிஞ்சா கைது செய்யுங்க பார்க்கலாம்.. பாஜகவுக்கு சவால் விடும் மணீஷ் சிசோடியா - டெல்லியில் திருப்பம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios