சிபிஐ ரெய்டுக்கு பயப்படாத ஆம் ஆத்மி.. குஜராத்துக்கு ஸ்கெட்ச் போட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - அடேங்கப்பா !
தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்குத் துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார். கலால் துறையில் 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே டெல்லி அரசின் புதிய மது கொள்ளைக்கு ஆளுநர் அனுமதி தராததால், இதை வாபஸ் பெறுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா ஊழல் செய்துள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாஜக கூறி வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக சிபிஐ கூறுகின்றனர். இதற்கிடையே சர்வதேச பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸ் மணீஷ் சிஷோடியாவை பாராட்டி முதல் பக்க கட்டுரை வெளியிட்டு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?
இதனை பொறுத்துக் கொள்ளாமலேயே மத்திய அரசு இந்த ரெய்டை அரங்கேற்றி உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வால் குற்றஞ்சாட்டி இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மணீஷ் சிசோடியா, இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் நான் கைது செய்யப்படலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் இருவரும் ஆமதாபாத் நகருக்கு வருகிற 22-ந்தேதி செல்கின்றனர். பிறகு ஹிமத்நகரில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பொது கூட்டம் ஒன்றில் அவர்கள் உரையாற்றுகின்றனர். இதன்பின்பு, அதற்கு அடுத்த நாள் பவ்நகரில் அவர்கள் இருவரும் உரையாற்றுகின்றனர். இந்த கூட்டத்தில் என்ன வகையான வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்ற ஆவலில் மக்கள் காத்திருக்கின்றனர். ஒருபக்கம் சிபிஐ ரெய்டு நடந்து முடிந்திருக்க கூடிய சூழ்நிலையில், உடனே டெல்லி முதல்வரும், துணை முதல்வரும் குஜராத்கு செல்வது அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்