Sonam Wangchuk: கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன்: சோனம் வாங்சுக் உறுதி
பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தைக் ஈர்ப்பதற்காகவே இந்த ஐந்து நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாகக் கூறிய வாங்சுக், “இனி 10 நாட்கள், 15 நாட்கள் என தொடர்ந்து என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடிக்கொண்டே இருப்பேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லடாக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி 5 நாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் உலக அளவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை பனிச்சிகரங்கள் வேகமாக உருகிவருகின்றன. இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாளங்களின் அளவு விரைவாக குறைந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இமயமலை பகுதியில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்.
Union Budget 2023: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?
இவர் லடாக்கில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி குடியரசு தினத்தில் இருந்து ஐந்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை் தொடங்கினார்.
கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் கார்டங் லா என்ற இடத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில் வாங்சுக் ஐந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் அவரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகிறார்.
இந்நிலையில், திங்கட்கிழமை கடைசி நாள் உண்ணவிரதத்தின்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையை லடாக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மாட்டிறைச்சி விற்றதாக இளைஞரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பஜ்ரங் தளம் தொண்டர்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தைக் ஈர்ப்பதற்காகவே இந்த ஐந்து நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாகக் கூறிய வாங்சுக், “இனி 10 நாட்கள், 15 நாட்கள் என தொடர்ந்து என் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடிக்கொண்டே இருப்பேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது வெளியிட்ட வீடியோவில், “லடாக்கின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நம் நாட்டு மக்களும் உலக மக்களும் உதவ வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அறிவியல் தொழில்நுட்பத்தால் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை சரிசெய்துவிட முடியாது என்றும் இந்தியாவின் மலைகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களைக் காப்பாற்ற நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.
Nitin Gadkari: 15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் வாகனங்களுக்குத் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு