மாட்டிறைச்சி விற்றதாக இளைஞரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பஜ்ரங் தளம் தொண்டர்கள்
முடிகெரேவுக்கு அருகே உள்ள முட்ரே மானேவில் கஜிவூர் ரஹ்மான் என்ற அசாம் மாநில இளைஞர் பைக்கில் சென்றுகொண்டிருந்ததார். அவர் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் இளைஞர் ஒருவரை மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி, மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொடுமைப் படுத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2021ஆம் ஆண்டு மாட்டிறைச்சி தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் பசு, காளை, எருதுகளை வெட்டுவதும், விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து மாட்டிறைச்சியை வாங்கி வந்து விற்பனை செய்வதை இந்த சட்டம் தடுக்கவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சி முழுமையாகத் தடை செய்யப்படவில்லை.
Nitin Gadkari: 15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் வாகனங்களுக்குத் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூரு மாவட்டம் முடிகெரேவில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. முடிகெரேவுக்கு அருகே உள்ள முட்ரே மானேவில் கஜிவூர் ரஹ்மான் என்ற அசாம் மாநில இளைஞர் பைக்கில் சென்றுகொண்டிருந்ததார். அவர் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரியவந்துள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த நிதின், அஜித், மது ஆகிய மூவரும் ரஹ்மானை தடுத்து நிறுத்தி, அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது.
ரஹ்மான் தாக்கப்பட்டது பற்றி அவரது மனைவி அலிசா கோனிபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஹ்மானைத் தாக்கிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் மூவரும் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே மாட்டிறைச்சி விற்றதற்காக ரஹ்மானையும் கோனிபீடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.1400 மதிப்பிலான மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனியார் டிவி சேனல்களில் 30 நிமிடம் பொதுநல நிகழ்ச்சி: மத்திய அரசு