சமூக அவலங்களுக்கு பேர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்த சிறுவனுக்கு வகுப்பு ஆசிரியர் செருப்புமாலை போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளிக்கு ஷூ அணியாமல் வந்த சிறுவனுக்கு செருப்பு மாலை போட்டு ஆசிரியர் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமமான பாப்சாவில் ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பில் மாணவன் ஒருவன் படித்து வருகிறான். இவன், வகுப்புக்கு வரும்போது ஷூ அணியாமல் வந்துள்ளான்.
மாணவன் ஷூ அணியாமல் வந்ததை கண்ட வகுப்பாசிரியர் கோபமடைந்துள்ளார். சிறுவனை, ஆசிரியர் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது. வகுப்பு ஷூ அணியாமல் வந்ததால், சிறுவன் என்றும் பாராமல் அவனுக்கு செருப்பு மாலையும் அணிவித்துள்ளார். வகுப்பில் நடந்த இந்த செயலால், மாணவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான்.
பின்னர், வீட்டுக்குத் திரும்பிய மாணவன், இது குறித்து தந்தையிடம் கூறியுள்ளான். சிறுவன் கூறியதை அடுத்து, அவனின் தந்தை, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்
