Breaking: நாடே போற்றும் இடதுசாரி ஆளுமை: யார் இந்த சீதாராம் யெச்சூரி?
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களாக தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களாக தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.
சுவாச நோய் தொற்று காரணமாக மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாச நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல் நிலை கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
தமிழகத்தில் வெயில் கொளுத்தப்போகுது.! 3 டிகிரி வரை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்
இதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவி சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவருக்கு நுரையீரலில் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை: 8 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.05 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.