MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் வெயில் கொளுத்தப்போகுது.! 3 டிகிரி வரை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் வெயில் கொளுத்தப்போகுது.! 3 டிகிரி வரை அதிகரிக்கும் - வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 12 2024, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
rain kerala

rain kerala

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. தற்போது மழையானது பெரும் அளவில் குறைந்துவிட்டது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (12.09.2024 மற்றும் 13.09.2024)  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதே போல 14.09.2024 முதல் 18.09.2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

25

உக்கிரமாகும் வெயில்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (12.09.2024 மற்றும் 13.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2"-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. 
 

35

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

AADHAAR : ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா.! கவலை வேண்டாம்- டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
 

45

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

நாளை (13.09.2024) மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.09.2024 முதல் 16.09.2024 வரை; மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

55

வங்கக்கடல் பகுதிகள்:

13.09.2024 முதல் 15.09.2024 வரை; தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.09.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved