AADHAAR : ஆதார் கார்டை அப்டேட் செய்யவில்லையா.! கவலை வேண்டாம்- டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
இந்தியாவில் சுமார் 140 கோடி மக்கள் ஆதார் அட்டை பெற்றுள்ள நிலையில், 100 கோடி பேர் மட்டுமே தங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பித்துள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.இந்தநிலையில் மேலுமு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு அப்டேட்
அரசின் சலுகைகளை பெறுவதில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார் எண் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதில் 101 கோடியே 50 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். எனவே ஆதார் அடையாள அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் செப்டம்பர் 14ஆம் தேதிதான் கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆதார் மையத்திலும், ஆன்லைலினும் ஆதார் அப்டேட் செய்ய ஏராளமானோர் முட்டி மோதினர். இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் கூட்டம் அலைமோதியது.
யாருக்கெல்லாம் ஆதார் அட்டை தேவை
ஆதாரில் புகைப்படம், கைரேகை, கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள எந்தவொரு நபரும் வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண்ணைப் பெற பதிவு செய்யலாம். பிறந்த குழுந்தைகள் முதல் ஆதார் எண் முக்கிய தேவையாக உள்ளது.
தனி நபர் ஒருவர் பெயரில் ஆதார் எண் உருவாக்கப்படும் . அந்த எண்ணின் மூலமாகவே அந்த நபர் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். ஒரு தனிநபரின் பேரில் ஒரே ஒரு ஆதார் மட்டுமே உருவாக்கப்படும். ஆதார் அட்டையில் இந்திய குடிமகனின் பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியிருப்பு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
Aadhaar card
ஆதார் எண் அப்பேட் ஏன்?
ஆதார் எண் அப்பேட் ஏன் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுகையில், 10 ஆண்டுகளில் பலர் ஒரு ஊரை விட்டு வெளியூருக்கு பயணம் செய்திருப்பார்கள். மேலும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருக்கும், மொபைல் எண்ணும் மாற்றப்பட்டிருக்கும். எனவே சரியான தகவல்களை பெறுவதற்காகத்தான் ஆதார் எண்ணை அப்டேட் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்காகத்தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் எண்ணை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அருகில் உள்ள ஆதார் சேவா மையத்திலோ அல்லது இணையதளம் மூலம் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
aadhaar
கட்டணம் இல்லாமல் ஆதார் எண் புதுப்பிப்பு
கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதாரை புதுப்பித்துள்ளனர். இன்னும் சுமார் 35கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் எண்ணை தற்போது வரை புதுப்பிக்கவில்லையென தகவலும் வெளியானது. இதனையடுத்து ஆதார் எண்ணை அப்டேட் செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்ற மத்திய அரசு கட்டணம் இல்லாமல் மேலும் 3 மாதங்களுக்குள் ஆதார் ஆப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதன் படி வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.