காவிரி விவகாரம் குறித்து சிம்புவின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாயினும் மனிதநேயத்துடன் செயல்பட்ட சிம்புக்கு எங்கள் ஆதரவு என்றுமே இருக்கும் என்று கர்நாடக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கம் முன்னின்று நடத்திய 'மௌன அறவழி போராட்டத்தில் கலந்துக் கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, எதோ ஒரு காரணத்திற்கு தான் இந்த போராட்டம் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், நானும் தமிழகத்தில் நடந்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறேன் என்று கூறினார். மேலும் தற்போது, யாரவது பேசுவது தான் இங்கு பிரச்சனையே... மூடிகிட்டு இருந்தா எந்த பிரச்னையும் இல்லை தான் அநீதிக்கு எதிராக அதிகமாக பேசுவது தான் பலருக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது என்பது போல் சூசகமாக பொடி வைத்து பேசினார். 

பொதுவாக இங்கு 10 பேர் சொல்வதை வைத்துக்கொண்டு ஒரு பிரச்னையை திசை திருப்பி வருவதாகவும் அதனால் தற்போது மக்கள் தமிழகத்தில் என்னென்ன காமெடி நடக்கிறது, என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து பின்னர் தான் பேசுவதாக கூறி சொல்ல வந்ததை கூட சொல்லாமல் மழுப்பி விட்டார். மேலும் தமிழகத்தில் எப்போதும் பிரச்சனைக்கு மேல பிரச்சனை இருப்பதாகவும் அரசியல் ரீதியாகவும், மற்ற திசைகளில் இருந்தும் தொடர்ந்து பல பிரச்சனைகளை தமிழகம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மழை, சினிமா வேலை நிறுத்தம் என்று கூறலாம் என தெரிவித்தார்.

வன்முறைகளும் போராட்டங்களும் எந்த தீர்வையும் தரப்போவதில்லை என்றும் அமைதியான முறையில் சக உயிராக நினைக்கும் எந்த கர்நாடக மக்களும் நமக்கு தண்ணீர் இல்லை என்று சொல்லப்போவதில்லை என்ற அர்தத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார். சிம்புவின் இந்த பேச்சு கர்நாடக மக்களின் ஆதரவை அவருக்கு பெற்று தந்துள்ளது.

அரசியல் காரணங்களால்தான் இந்த தண்ணீர் பிரச்சனை இவ்வளவு காலமாக தரப்படாமல் இருந்து வருகிறது. தமிழர்கள் எங்கள் சகோதரர்கள்தான். சிம்புவின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாயினும் மனிதநேயத்துடன் செயல்பட சிம்புவுக்கு எங்கள் ஆதரவு என்றுமே இருக்கும் என்று கர்நாடக மக்கள் சிம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.