மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை தொடங்கியது. முதலில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே பேசிய போது ஆளும் கட்சியினருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சியினருக்கு அவையில் பேச குறைவான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்பு பேசிய தெலுங்கு தேச கட்சி எம்.பி. ஜெயதேவ் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில் பிஜூ ஜனதா தளம் உறுப்பினர்கள் விவாதத்தை புறக்கணித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஒடிசாவுக்கு இந்த விவாதத்தின் மூலம் எந்த பயனுமில்லை இல்லை என கூறி 19 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் விவாதத்தில் பங்கேற்கவில்லை. மேலும் பட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி விவாதத்தை புறக்கணித்துள்ளது.