உ.பி. காசியாபாத்தில் தரையிரங்கிய ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர்! இந்தியாவில் தஞ்சம் அடைகிறாரா?
தலைநகர் டெல்லிக்கு அருகில் காசியாபாத்தில் இருக்கும் ஹிண்டன் விமானப் படை தளத்தில் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கி இருக்கிறது.
வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தரையிறங்கியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். தொடர்ந்து உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு வெளிறினார்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடையக்கூடும் என்றும் லண்டனுக்குச் செல்ல இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஷேக் ஹசீனா பயணித்த ஹெலிகாப்டர் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் தரையிறங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்து இருக்கிறாரா ஷேக் ஹசீனா? வங்கதேச பிரதமர் பதவி ராஜினாமா!
தலைநகர் டெல்லிக்கு அருகில் இருக்கும் ஹிண்டன் விமானப் படை தளத்தில் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கி இருக்கிறது. அவரது ஹெலிகாப்டர் இந்திய வான் பரப்பில் பரப்பதை இந்தியா ரேடார் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அவர் காசியாபாத்தில் இறங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இனி ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே தஞ்சமடையப் போகிறாரா அல்லது லண்டனில் அடைக்கலம் தேடப் போகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிதமரை சந்தித்து உரையாடி இருக்கிறார். வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. ஷேக் ஹசீனாவும் இந்தியாவுக்கு வந்துள்ளார். இச்சூழலில் பிரதமர் - வெளியுறவுத்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?