சரத் பவாருக்குப் பின் அவரது மருமகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறவில்லை. இதனால் அவருக்குப் பின் கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நான்கு முறை மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்த அவர் சரத் பவார். செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த அவரது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மராத்தி மொழியில் பேசிய அவர், தனது முடிவை அறிவித்தார். அதற்கு விழாவில் கூடியிருந்த தொண்டர்களும் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், சரத் பவார் கட்சியின் மூத்த தலைவர்களைக் கொண்ட குழு எதிர்கால தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றி முடிவெடுக்கும் என்று அறிவித்தார். கட்யிலிருந்து விலகி பாஜகவில் இணைவுள்ளதாகப் பேசப்பட்ட சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் முன்னிலையில் இந்த திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

"கடந்த ஆறு தசாப்தங்களில் மகாராஷ்டிரா மக்களும் கட்சியினரும் எனக்கு வலுவான ஆதரவையும் அன்பையும் வழங்கியதை என்னால் மறக்க முடியாது. புதிய தலைமுறை கட்சி வழிநடத்தும் நேரம் இது. இனி அவர்கள் கட்சியை வழிநடத்துவார்கள். கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்" என்றார்.

எனினும், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், சரத் பவார் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர் தனது முடிவை திரும்பப் பெறாவிட்டால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். என்சிபியின் உயர்மட்ட தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிரபுல் படேல் கூறுகையில், சரத் பவார் தனது ராஜினாமா முடிவு பற்றி யாரிடமும் ஆலோசிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

முன்னாள் துணை முதலமைச்சரான சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுடன் இணைய ஆயத்தமாகி வருவதாகப்ப பேசப்படும் சூழலில் இந்த அறிவிப்பு வந்திருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது. அதற்கு முன் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தால், மகாராஷ்டிராவில் ஆட்சியில் நடைபெற்றுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இந்நிலையில், சரத் ​​பவாரின் மகள் சுப்ரியா சுலே, சரியாக 15 நாட்களுக்கு முன்பு, இரண்டு பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என சூசகமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.