Asianet News TamilAsianet News Tamil

ஆனந்த பவனில் செங்கோல் வாக்கிங் ஸ்டிக் ஆனது துரதிர்ஷ்டவசமானது: ஆதீனங்கள் முன் பிரதமர் மோடி உரை

சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Sengol is the traditional symbol of Tamil power says PM Modi
Author
First Published May 27, 2023, 10:07 PM IST

டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது, "சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களாகிய உங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது." என்று கூறினார்.

பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடிக்க எத்தனை கோடி செலவானது?

மேலும், "சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. நாங்கள் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளோம்." என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், "இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதை இந்த செங்கோல் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்" என்றார்.

"இந்தியா எந்த அளவுக்கு ஒன்றுபட்டிருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை முன்வைப்பார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் தேசத்தின் ஆன்மிக பலம் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்" என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!

Sengol is the traditional symbol of Tamil power says PM Modi

நாளை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு  7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார். நாளை நடைபெறும் திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து 25 ஆதினங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடினர். மதுரை, தருபுரம் ஆதீனங்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவின்போது பிரதமர் மோடி தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவுவார். 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தச் செங்கோலைப் பெற்றுக்கொண்டுதான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா சுதந்திரம் பெற்றதை அறிவித்தார்.

தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்: பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி

Follow Us:
Download App:
  • android
  • ios