ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கபட்டன.. காலாண்டு தேர்வு தொடங்கியது.

புதுச்சேரில் காய்ச்சல் காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கபட்டன. 
 

Schools reopen in Puducherry after a week's holiday.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவியதை அடுத்து, சுகாதாரத்துறையின் பரிந்துரையை ஏற்று 25 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம், திட்டமிட்டப்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு,காலாண்டு தேர்வு நடைபெறும் என்றார்.

மேலும் படிக்க: கருணாநிதியை எச்சரித்தேன் கேட்கவில்லை; அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்; சுப்ரமணியன் சாமி

அதன்படி இன்று ( செப்.26) புதுச்சேரி முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அது போன்று  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios