Asianet News TamilAsianet News Tamil

BREAKING பள்ளிகள் திறந்த 3 நாட்களில் அதிர்ச்சி... 150 ஆசிரியர்கள்.. 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

schools reopen... 150 teachers, 10 students test positive
Author
Chittoor, First Published Nov 4, 2020, 4:37 PM IST

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜுன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம்  முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. எனினும், இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.  இதனால், பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தனர். 

schools reopen... 150 teachers, 10 students test positive

இந்நிலையில்,  ஆந்திராவில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதில் 1, 3, 5, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு நாள் என்று 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கை 750க்கு மேல் இருந்தால் 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். 

schools reopen... 150 teachers, 10 students test positive

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களே ஆன நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 150 மாணவர்கள் மற்றும்  10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே  மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios