school teacher abuse the students in srilanka

இலங்கையில் பள்ளி மாணவிகளிடம், தவறாக நடந்துக்கொண்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

யாழ்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள, பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதமாக மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடமோ அல்லது மற்றவர்கள் யாரிடமாவது மாணவிகள் கூறினால் அவர்களை பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என மிரட்டியே இந்த கொடூர சம்பத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

ஒரு நிலையில், மாணவிகள் சிலர் தைரியமாக இது குறித்து, தங்களுடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து தற்போது பெற்றோர் கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் 8 மாணவிகளிடம் வாக்கு மூலம் வாங்கினர், பின் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.