Asianet News TamilAsianet News Tamil

லாகூர் - டெல்லி ரயில் சேவை... மீண்டும் பச்சைக் கொடி காட்டிய இந்தியா!

அபிநந்தன் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் ஞாயிறு முதல் மீண்டும் இயக்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிதுள்ளது.
 

Samjhauta Express service restored
Author
India, First Published Mar 2, 2019, 11:29 PM IST

Samjhauta Express service restored

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மீண்டும் ஞாயிறு முதல் சேவையை தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம் காரணமாக லாகூர் -  டெல்லி இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைக்கு சிக்கல் ஏற்பட்டது.Samjhauta Express service restored

இரு நாடுகளிலும்ளுக்கும் இடையே பதற்றம் நிலவியதால் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. 75 மணி நேரம் பாகிஸ்தான் பிடியில் இருந்த அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் ஞாயிறு முதல் மீண்டும் இயக்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிதுள்ளது.Samjhauta Express service restored
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) டெல்லியிலிருந்து இந்த ரயில் புறப்பட்டு, திங்கள் கிழமை (மார்ச் 4) திங்கள் கிழமை லாகூரை அடையும்.  அன்றைய தினம் லாகூரிலிருந்து டெல்லிக்கு மீண்டும் இந்த ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios