டெல்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாகவது, 

வங்கி கணக்கு வைத்திக்கும் விவசாயிகள் வாரத்திற்கு 25000 ரூபாய் வரை எடுக்கலாம் என்றும், பயிர் காப்பீடு செலுத்த விவசாயிகளுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், திருமண வீட்டார் ஒரு கணக்கில் மட்டும் 2.5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம். அதாவது திருமணத்திற்காக பணம் எடுக்க உரிய ஆவணங்ஙகள் வங்கிகளில் செலுத்தி தாயோ அல்லது தந்தையோ 2.5லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

கடந்த 8ம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

குறிப்பாக, திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தவர்கள் திருமணத்திற்காக போதிய பணம் இல்லாமல் தவித்து வருவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில்,சக்திகாந்ததாஸின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.