மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள பண பரிமாற்றம் குறித்த பிரச்சனையில் 7 நிபந்தனைகளை கூறினார்.
- திருமணம் செய்ய இருப்பவர்கள், மணப் பெண்ணின் பெற்றோர், அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். அதற்கு உரிய சான்றிதழ்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- தற்போது வரை பண மாற்றம் செய்யும்போது, ரூ.4,500 வரை வழங்கப்பட்டது. ஆனால், நாளை முதல் ரூ.2000 என குறைக்கப்படுகிறது. மேலும், கையில் மை வைத்த பிறகு, அந்த நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியாது.
![]()
- விவசாயிகள், தங்களது வங்கி கணக்கில் இருந்து வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.
- விவசாயத்துக்கு தேவையான உரம், இடுபொருள் வாங்குவதற்கு, வேளாண் சந்தை கமிட்டியில் உறுப்பினராக உள்ளவர்கள், அங்கு பதிவு செய்து, ரூ.50 ஆயிரம் வரை வங்கியில் பணம் எடுக்கலாம்.
- வணிகர்கள், வியாபாரத்துக்கு தேவையான பணத்துக்கு ஒரு வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை தங்களது வங்கி கணக்கில் எடுத்து கொள்ளலாம்.
- மத்திய அரசு ஊழியர்கள் (குரூப்-சி பிரிவு), தங்களது நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் வரை முன்பணமாக பெற்று கொள்ளலாம்.

