Asianet News TamilAsianet News Tamil

ரூ,600 கோடி செலுத்தியே ஆகவேண்டும் : சுப்ரதராய் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

sahara case
Author
First Published Jan 13, 2017, 10:23 AM IST

பணமோசடி தொடர்பான வழக்கில் சகாரா குழுமத் தலைவர் சுப்ரதராய் தொடர்ந்து பரோலில் இருப்பதற்கு, 600 கோடி ரூபாய் செலுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சகாரா ரியல் எஸ்டேட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கில், கடந்த 2012-ம் ஆண்டு சகாரா குழுமம், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதனை செலுத்த தவறியதால், சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து, பரோலில் விடுதலை செய்யக்கோரி சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், 600 கோடி ரூபாயை அடுத்த மாதம் 6-ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் பரோலில் வெளிவந்தார். 

இந்நிலையில், 600 கோடி ரூபாயை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்ககோரி, உச்சநீதிமன்றத்தில் சுப்ரதா ராய் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில்  நீதிபதிகள் திரு. தீபக் மிஸ்ரா, திரு. கோகாய், திரு. அர்ஜன் குமார் சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சகாரா குழுமத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரதா ராய்க்கு பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதால், அடுத்த மாதம் 6-ம் தேதிக்குள் 600 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால், அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios