சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் தீக்குளிப்பு… வைரலாகும் வீடியோ!!
ராஜஸ்தானின் பாரத்பூரில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு இடையே சுவாமிஜி விஜய் தாஸ் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தானின் பாரத்பூரில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு இடையே சுவாமிஜி விஜய் தாஸ் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பாரத்பூரில் சட்டவிரோத சுரங்கத்தை தடை செய்யக் கோரி நடைபெற்று வரும் போராட்டம் இன்று வன்முறையாக மாறியது. மேலும் இந்த போராட்டத்தில் சுவாமிஜி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். நேற்று அதே பகுதியில் உள்ள மொபைல் டவரில் ஏறி சுவாமி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் மாம்பழ மனிதர் கலீம் உல்லா கான் ! ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்கள்.
போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மொபைல் டவரில் இருந்து சுவாமி கீழே இறங்கி வந்தார். இந்த நிலையில் இன்று போராட்டம் நடைபெறும் இடத்தில் நின்று கொண்டிருந்த சாது விஜய் தாஸ், திடீரென தீக்குளித்தார். தீயை அணைக்க போலீஸ் குழு போர்வைகளுடன் விரைந்து வந்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவர், பாரத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கோஹ் நிலைய அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுக்குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத், ராஜஸ்தானின் பரத்பூரில் சட்டவிரோத சுரங்கத்திற்கு எதிராக 551 நாட்களாக சாது துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சாது விஜய் தாஸ் தீக்குளித்துக்கொண்டார். கெலட் அரசுக்கு வெட்கமில்லை. ராகுல் காந்தி இந்த சம்பவம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த ஊழல் பற்றி அவருக்கு தெரியும், ஆனால் இந்து துறவிகளின் உயிர் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.