இந்தியாவின் மாம்பழ மனிதர் கலீம் உல்லா கான் ! ஒரே மாமரத்தில் 300 வகை மாம்பழங்கள்

மாமரத்தில் மாம்பழங்கள் காய்த்துப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் காய்த்துப் பார்த்ததுண்டா!...உத்தரப்பிரதேசத்தில் உள்ள மலிகாபாத் நகரில்தான் இந்த அதிசய மாம்மரம் இருக்கிறது. 83 வயதான கலீம் உல்லா கான் இந்த மாமரத்தை பராமரித்து வருகிறார். 

Indias Mango Man, Father Of 300 Varieties

மாமரத்தில் மாம்பழங்கள் காய்த்துப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் காய்த்துப் பார்த்ததுண்டா!...

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மலிகாபாத் நகரில்தான் இந்த அதிசய மாம்மரம் இருக்கிறது. 83 வயதான கலீம் உல்லா கான் இந்த மாமரத்தை பராமரித்து வருகிறார். 

ராகுல் காந்தி அரசியல்ரீதியாக பயனற்றவர்: நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது: ஸ்மிருதி இரானி விளாசல்

உத்தரப்பிரதேசத்தின் மலிகாபாத் மாம்பழத்துக்கு பெயர் பெற்றது. கிருஷ்ணகிரி மாம்பழம், சேலத்து மாம்பழம் என்றெல்லாம் எவ்வளவு புகழ்வாய்ந்ததோ அதுபோல் வடமாநிலங்களில் மலிகாபாத் மாம்பழம் அனைவருக்கும் தெரியும். இந்த நகரில் வாழும் மக்களில் 90 சதவீதம் பேரின் தொழில் மாமரம் பராமரிப்பு, விவசாயம், மாம்பழ ஏற்றுமதி அது சார்ந்த தொழில்தான். 

Indias Mango Man, Father Of 300 Varieties

இந்தியாவில் அதிகமான மாம்பழங்கள் விளையும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் முக்கியமானாதாகும். இந்த மலிகாபாத்தைச் சேர்ந்த கலீம் உல்லா கான்தான் தன்னுடைய 120 ஆண்டு பழைமையான மரத்தில் 300 வகையான மாம்பழங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட கலீம் உல்லா கான், தனது சொந்த முயற்சியால் பல்வேறு மாமரங்களை இந்த மாமரத்தோடு ஒட்டவைத்து, பதியம் போட்டு பரிசோதனை செய்து பார்த்தார். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான மாம்பழங்கள் கிடைத்தன.
கலீம் உல்லா கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சாதாரண கண்களால் பார்த்தால் இது மாமரம்தான். ஆனால், மனதால் பார்த்தால் இது மரமல்ல, பழத்தோட்டம், உலகின் மிகப்பெரிய மாம்பழக் கல்லூரி. 120 ஆண்டுகள் ஆகிய பழமையான மரம். நான் சிறுவயதிலிருந்தே பலவகையான மாம்பழங்களை உருவாக்க முயற்சி செய்தேன். 

இதற்காக மாமரங்களை ஒட்டுவித்தல், ஹெபிரிட் உருவாக்குதல் என பல முயற்சியால் புதிய வகை மாம்பழங்கள் எனக்குக் கிடைத்தன. இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பெயர் வைத்தேன்.

Indias Mango Man, Father Of 300 Varieties

இந்த 120 வயதான மாமரத்தில் விளையும் 300 வகையான மாம்பழங்களும் சுவையில், மணத்தில், நிறத்தில், தோற்றத்தில் வித்தியாசமானவை. இ்ந்த மாமரத்தில் மிகமிகச் சுவையான மாம்பழம்இருக்கிறது, இந்த மாம்பழம் ஒரு கிலோவரை காய்க்கும். இந்த மாமரத்துக்கு ஐஸ்வர்யாராய் என்று பெயர்சூட்டினேன்.

பிரதமர் மோடியை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வகையான மாம்பழத்துக்கு பிரதமர் மோடி பெயரும், சச்சின் டெண்டுல்கர் பெயரை ஒரு மாம்பழத்துக்கும் வைத்தேன்.

சிவசேனா கதை முடிகிறதா? 12 எம்.பி.க்கள் ஷிண்டே பக்கம்: புதிய அவைத் தலைவர் தேர்வு

அனார்கலி என்ற மாம்பழம், மாதுளை மணம் வரும் மாம்பழம், இரு அடுக்கு தோல் கொண்ட மாம்பழம், வித்தியாசமான மணம் கொண்ட மாம்பழம் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறேன். மக்கள் இந்தஉலகில் வரலாம், போகலாம். ஆனால் மரங்கள் காலத்துக்கும் வாழக்கூடியவை. நம்முடைய மறைவுக்கும் பின்பும் மரங்கள் வாழும். 

மனிதர்களின் கைரேகை யாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதுபோல, மாம்பழங்கள் சுவையில் ஒன்றோடொன்று வேறுபடும். மனிதர்களைப் போல், மாம்பழங்களையும் இயற்கை கொடையாக வழங்கியுள்ளது. ”
இவ்வாறு கான் தெரிவி்த்தார்

கடந்த 2008ம் ஆண்டு கலீம் உல்லா கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளும் கலீம் உல்லா கானை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பெருமைப்படுத்தியுள்ளன
மலிகாபாத்தில் 30ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தில் மாந்தோப்புகள் உள்ளன. தேசிய அளவில் 25 சதவீதம் மாம்பழங்கள் இங்கிருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாடும், மழையின்மையும், காலநிலை மாற்றமும் மா விளைச்சலுக்கு ஆபத்தாக இருக்கின்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios