ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்!!

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானாதை அடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

rjd veteran leader Sarath Yadav passes away and pm modi condoles

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானாதை அடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜேடியுவின் முன்னாள் தேசியத் தலைவராக இருந்த சரத் யாதவ் குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி... கர்நாடகாவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததுள்ளார். அவருக்கு வயது 73. இதனை உறுதி செய்துள்ள அவரது மகள் சுபாஷினி யாதவ், ஷரத் யாதவ் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இறந்தார் என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேசிய ஆடை போட்டியில் அசத்திய இந்தியா… தங்கப்பறவை போல காட்சியளிக்கும் திவிதா ராய்!!

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், சரத் யாதவ் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது நீண்ட பொது வாழ்க்கையில், அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios