தேசிய ஆடை போட்டியில் அசத்திய இந்தியா… தங்கப்பறவை போல காட்சியளிக்கும் திவிதா ராய்!!
அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய ஆடை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற திவிதா ராயின் தங்கப்பறவை போன்ற ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய ஆடை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற திவிதா ராயின் தங்கப்பறவை போன்ற ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை 2021 ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் கவுர் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் நிர்வாக தயாரிப்பாளர் நிக் டெப்லிட்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.
இதையும் படிங்க: ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை நீக்கம்
வரும் ஜன.14 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வருவர். அந்த வகையில் இந்தியா சார்பில் திவிதா ராய், இறக்கைகளுடன் கூடிய அற்புதமான தங்க நிற லெஹங்கா அணிந்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதையும் படிங்க: ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த 15,300 லிட்டர் பால்! கேரள எல்லையில் சிக்கியது
அவரது உடை வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் செல்வத்தின் சின்னமாக விளங்கும் இந்தியாவை தங்கப் பறவையாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய அழகான ஆடையை வடிவமைத்த அபிஷேக் ஷர்மா பேசுகையில், தேசிய உடையை வடிவமைக்கும் போது, நம் நாட்டின் முழு வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் காட்ட விரும்பினேன் என்றார்.