உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் மூன்று பாஜக எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சமாஜ்வாதியில் இணைந்த பிதுனா தொகுதி எம்.எல்.ஏ மகள் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று வைத்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் சட்ட பேரவை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் மூன்று பாஜக எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவ்யின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சமாஜ்வாதியில் இணைந்த பிதுனா தொகுதி எம்.எல்.ஏ மகள் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று வைத்துள்ளார்.

எம்.எல்.ஏ வினய் ஷக்யாவின் மகள் ரியா ஷக்யா தனது மாமா தேவேஷ் ஷக்யா தனது தந்தையை வலுக்கட்டாயமாக லக்னோவிற்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரியா ஷக்யா பாஜக சார்பில் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என் தந்தைக்கு எஸ்.பி.யில் சேரவே விருப்பம் இல்லை என்று அவரது மகள் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தன் அண்ணன் மற்றும் அம்மாவுடன் நேராக லக்னோ செல்லவுள்ளதாகவும் தன் தந்தையை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றால், காவல் நிலையத்தில் கடத்தியதாக புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எம்.எல்.ஏ வினய் ஷக்யா நடக்கவும் பேசவும் முடியாமல் உள்ளார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக படுக்கையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவரது மகள் பிதுனா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வினய் ஷக்யா இரண்டு முறை பிதுனா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஒருமுறை எம்எல்சியாகவும் நியமனம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வினய் ஷக்யாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் படுக்கை ஓய்வில் இருக்கிறார். 

வினய் ஷாக்யா 2012 ஆம் ஆண்டு எம்எல்சியாக இருந்தபோது தனது சகோதரர் தேவேஷ் ஷக்யாவை பிதுனா தொகுதியில் நிறுத்தினார். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதுக்குறித்து பேசிய தேவேஷ் ஷக்யா தனது சகோதரனை ஏன் நான் கடத்த வேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். ரியாவின் குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரிக்கும் என்றும் அவர் சம்மதத்துடன் தான் லக்னோ வந்துள்ளார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். சில கட்சித் தலைவர்களின் அழுத்தத்தால் ரியா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.