தெலுங்கானா முதல்வர் ஆகிறார் ரேவந்த் ரெட்டி! டிசம்பர் 7ஆம் தேதி பதவியேற்பு விழா!
தெலுங்கானாவின் அடுத்த முதலமைச்சராக அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார்.
தெலுங்கானாவின் அடுத்த முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அவர், முதல்வராவதற்கு முன்பாக சட்டமன்றக் கட்சியின் தலைவராக இன்று மாலை முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா முதல்வரின் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (நவம்பர் 7) நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் யார் என்ற சர்ச்சை உருவானது. ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவித்ததை அடுத்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 உந்தவிசைக் கலனை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவந்த இஸ்ரோ!
54 வயதான ரேவந்த் ரெட்டி காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். ஆனால், கட்சித் தலைவர் பதவிக்கு அவரை நியமித்தபோதே கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இப்போதும் தெலுங்கானாவில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் ரேவ்ந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், திங்கட்கிழமை மதியம் நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, பட்டி விக்ரமார்கா, கோமாட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா எனப் பலர் ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி கொடுப்பதை விரும்பவில்லை என்று தகவல்கள் வெளிவந்தன.
ரேவந்த் ரெட்டி மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவரது சொந்த மக்களவைத் தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் 64 இல் வெற்றி பெற்ற காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 39 இடங்களை மட்டும் பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் வென்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் 8 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது.
கோ மூத்திர மாநிலங்களில் தான் பாஜக ஜெயிச்சுருக்கு! திமுக எம்.பி. செந்தில் குமார் சர்ச்சை பேச்சு