மாதவிலக்கின் போது பெண்களை ஒதுக்கிவைக்கும் பழங்கால இந்து வழக்கத்தை குற்றமாக அறிவித்துள்ள நேபாள நீதிமன்றம், அவ்வாறு ஒதுக்கிவைத்தால், அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்து நாடான நேபாளத்தில் பெண்கள் மாத விலக்கின் போது, அவர்களை வீட்டுக்குவௌியே ஒரு சிறிய குடிசையில் தங்கவைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாதவிலக்கின் போது பெண்கள் சுத்தமற்றவர்களாகக் கருதி அவர்களை சிறியகுடிசையில் தங்கவைப்பது, தூங்கவைப்பது என் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு ‘சவுபாதி’ என்று  பெயர்.

இந்நிலையில், இந்த பழங்கால இந்து வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது நேபாள நாடாளுமன்றம். இதன்படி, நேபாளத்தில் பெண்களை மாதவிலக்கின் போது ஒதுக்கிவைத்து, தனியாக ஒருகுடிசையில் தங்கவைப்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு 3 மாத சிறைதண்டனை அல்லது ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி நேபாள நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, “ பெண்ணை மாதவிலக்கு காலத்தில் சவுபதி வழக்கத்தை யாரும் பின்பற்றக்கூடாது. அந்த நேரத்தில் யாரும், ஒரு பெண்ணை தனிமைப்படுத்தவோ, வேறுபடுத்தவோ,தீண்டத்தகாதவர்களாவோ, மனிதநேயமற்ற முறையிலோ நடத்தக் கூடாது. ’’ இந்த சட்டம் நடைமுறைப்படுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது.

கடந்த மாதம் இதேபோன்ற சவுபாதி வழக்கத்தில் குடிசையில் இருந்த ஒரு பெண் பாம்புகடித்து  இறந்தார். இதேபோன்று கடந்த ஆண்டு 2 பெண்கள் இறந்தனர். இந்த பழக்கத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்து ஒரு ஆண்டாகியும், இன்னும் நேபாளத்தின் பல பகுதிகளிலும், மேற்குமாவட்டங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.