Asianet News TamilAsianet News Tamil

நான்கு மாதத்தில் இறந்த 8 சிறுத்தைகள்.. நடவடிக்கை எடுக்கச்சொன்ன உச்ச நீதிமன்றம் - மத்திய அரசின் பதில் என்ன?

சிறுத்தைகள் இறந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

Reason behind the death of cheetahs in kuno national park in heatstroke says centre
Author
First Published Jul 20, 2023, 10:03 PM IST | Last Updated Jul 20, 2023, 10:04 PM IST

மத்திய அரசின் ஒரு புதிய முயற்சியாக ஆப்பிரிக்க நாட்டில் இருந்து 20 சிறுத்தை புலிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. அவை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த நான்கு மாத காலத்தில் 8 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இந்நிலையில் புலிகள் அனைத்தும் இறந்ததற்கு முக்கிய காரணமாக அவைகளுக்கு ஏற்பட்ட உடல்நல குறைவும், குனோ தேசிய பூங்கா பகுதியில் நிலவிய அதிக வெப்பமும் தான் காரணம் என்ற பதிலை தற்பொழுது அளித்துள்ளது மத்திய அரசு. 

மணிப்பூர் கலவரம்.. இரு பெண்களுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை - மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்!

அரசு வழங்கியுள்ள தகவலின்படி சாஷா என்ற பெண் சிறுத்தை கடந்த மார்ச் 27ம் தேதி உடல் நல குறைவால் இருந்தது என்றும். உதை என்ற ஆண் சிறுத்தை இருதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையினால் ஏப்ரல் 23ம் தேதி இறந்தது என்றும். மேலும் மே ஒன்பதாம் தேதி தக்ஷா என்ற சிறுத்தையும் உடல்நல குறைவால் இறந்தது என்றும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சாஷா, உதை, தக்ஷா, தேஜஸ் மற்றும் சூரஜ் ஆகிய சிறுத்தைகள் இருந்த நிலையில் மேலும் 3 சிறுத்தை குட்டிகளும் அதிக வெப்பத்தால் இறந்ததையும் மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் சம்பவத்துக்கு மாநில அரசுதான் பதில் சொல்லணும்! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios