1000 லிட்டர் கள்ளசாராயத்தை காவல் நிலையத்திலியேயே குடித்து தீர்த்த எலிகள்

உத்தரபிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்ட்டத்தில் உள்ளது கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம். இங்கு வைக்கப் பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராயத்தை அங்குள்ள எலிகளே குடித்து தீர்ந்துள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது  

அந்த பகுதியில் பொதுவாகவே கள்ளச்சாராயம் விற்பனை அதிகமாக உள்ளதால் அடிக்கடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுவது வருவது வழக்கம். அவ்வாறு சோதனை செய்த போது பிடிக்கப்பட்ட சுமார் 1000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த சாராயத்தை காவல் நிலையத்திலேயே சில கேன்களில் போலீசார் வைத்திருந்தனர்.கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக இதே போன்று சேமித்து வைத்திருந்த சாராயம் அனைத்தையும் கேன்களில் அடைக்கப்பட்டு காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காவல் நிலையத்திற்கு தலைமை காவலராக நரேஷ் பால் என்பவர் என்பவரை புதியதாக நியமித்தனர்.

அவர் பதிவேட்டில் உள்ளபடி ஆயிரம் லிட்டர் சாராயம் இருக்கின்றதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சாராய கேன்களில் ஒரு சொட்டு கூட சாராயம் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றார்.அப்போது அந்த கேனின் கீழ்ப்பகுதியில், சிறிய சிறிய ஓட்டைகள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்தான் தெரிய வந்துள்ளது அங்கு அதிக எலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்த எலிகளே இந்த சாராயத்தை குடித்து விட்டதாக பதிவு செய்து உள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே இவ்வளவு சாராயத்தையும் எலிகள்தான் குடித்து இருக்குமா என ஒரு சந்தேகத்தில் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர் போலீசார்.