பைக்கில் சுய இன்பம் செய்துவிட்டு பெண்ணுக்கு 'லவ் யூ' மெசேஜ் அனுப்பிய ராபிடோ டிரைவர்
சவாரி முடிந்த பின்பும், அவர் இடைவிடாமல் வாட்ஸ்அப்பில் எனக்கு போன் செய்துகொண்டிருந்தார் என்று அந்தப் பெண் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பெங்களூருவில் ராபிடோ பைக் டாக்ஸி டிரைவர் ஒருவர் தன் பைக்கில் ஒரு பெண் சவாரி செய்தபோது, சுய இன்பம் செய்துவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் லவ் யூ மெசேஜ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ட்விட்டரில் புகார் கூறியுள்ளார்.
ராபிடோ பைக் டிரைவர் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களுடன் அந்தப் பெண் ட்வீட் செய்த பின்புதான் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஓட்டுநர் சவாரியின் போது சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும், அதற்குப் பிறகு அவரது எண்ணை பிளாக் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை பலமுறை தனக்கு போன் செய்ததாகவும் அந்தப் பெண் புகார் கூறியுள்ளார். பெங்களூரு நகரத்தில் மணிப்பூர் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அந்தப் பெண் தெரிவிக்கிறார்.
இஸ்ரோவில் ஸ்கைரூட் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ராமன்-II ராக்கெட் எஞ்சின் சோதனை வெற்றி!
டிரைவர் ராபிடோ அப்ளிகேஷனில் குறிப்பிடப்பட்ட பைக்குக்குப் பதில் வேறு பைக்கில் வந்தார் எனவும் டிரைவரின் மொபைலில் புக்கிங்கை உறுதிப்படுத்திய பின்பு சவாரி செய்ததாகவும் சொல்கிறார். சவாரியின் போது, ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான சாலையில் செல்லும்போது டிரைவர் சுயஇன்பம் செய்துகொண்டே ஒரு கையால் சவாரி செய்யத் தொடங்கி இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், பாதுகாப்புக்காக தான் இறங்கும் இடத்தை அடையும் வரை அமைதியாக இருந்தாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தன் வீட்டு முகவரி அவருக்குத் தெரியாமல் இருக்க வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே இறங்கி இருக்கிறார். "சவாரி முடிந்த பின்பும், அவர் இடைவிடாமல் வாட்ஸ்அப்பில் எனக்கு போன் செய்துகொண்டிருந்தார்" என்று அந்தப் பெண் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த நபர் அனுப்பிய மெசேஜ்களில் முத்தமிடும் எமோஜிகளுடன் "லவ் யூ" என்றும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெங்களூரு எஸ்.ஜே.பார்க் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குற்றம்சாட்டப்படும் குருவேட்டப்பா என்ற நபரை கைது செய்துள்ளனர்.
ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?