Rajya Sabha : மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! மார்ச் 13வரை ஒத்தி வைப்பு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக, மார்ச் 13ம்தேதிவரை ஒத்திவைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக, மார்ச் 13ம்தேதிவரை ஒத்திவைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக் கோரி எதிர்க்கட்சிகள் காலை முதல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
மோடியின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியதே பால் தாக்ரேதான்! உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி விவகாரம் தொடர்பாக கோஷமிட்டதையடுத்து, அவைத் தலைவர் ஜெகதீப் தனகர் அவையை சிறிதுநேரம் ஒத்தி வைத்தார்
அதன்பின் அவை கூடியதும் அதானி விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கோரிஅமளியில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ் எம்.பி. ரஜினி பட்டீல் சஸ்பெண்ட் உத்தரவையும் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
இருப்பினும் கேள்வி நேரம் தொடங்கியதா அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பேசுவதற்கு மாநிலங்களவைத் தலைவர் அழைப்பு விடுத்தார். ஆனால, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். காங்கிரஸ் எம்.பி. ரஜினி பாட்டீல் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கோரினர்.
அப்போது அவைத்தலைவர் தனகர் பேசுகையில் “ அவையில் முன்அனுமதி பெறாமல் வீடியோவை காங்கிரஸ் எம்.பி. வெளியிட்டார். அதனால்தான் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரின் செயலை உலகமே பார்த்தது.
இவரின் செயல் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். நான் அவை உறுப்பினரிடம் கேட்கிறேன், உங்கள் செயல்பாடுகள் பேச்சுகள், நடத்தைகள் அனைத்தையும் மக்கள் பார்க்கிறார்கள். தொடர்ந்து இதுபோன்று அவையை நடத்த முடியாமல் இடையூறு செய்தால், கூச்சல், குழப்பம் விளைவித்தால் மக்கள் எதிர்ப்பார்ப்பின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என எச்சரித்தார்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு பயணம்: பழங்குடியினர் வீட்டுக்கு சென்றார்
பாஜக மாநிலங்களவைத் தலைவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில் “ குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேசியபோது, எதிர்க்கட்சி எம்.பிக்கள் செயலுக்கு முதலில் அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். அதன்பின் ரஜினி பாட்டீல் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கலாம்” எனத் தெரிவித்தார்
ஆனால், தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவையை மார்ச் 13ம் தேதிவரை ஒத்தி வைத்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தனகர் உத்தரவிட்டார்.