Rahul in wayanad: ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு பயணம்: பழங்குடியினர் வீட்டுக்கு சென்றார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பழங்குடி இனத்தவர் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்
14-வது விமான மற்றும் பாதுகாப்பு தொடர்பான Aero இந்தியா கண்காட்சி: பிரதமர் மோடி இன்று தொடக்கம்
பாரத் ஜோடோ யாத்திரையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இருந்த ராகுல் காந்தி, தனது சொந்தத்தொகுதியான வயநாட்டுக்கு வரமுடியாத நிலை இருந்தது. தற்போது பாரத் ஜோடோ யாத்திரை முடிந்துவிட்டநிலையில், தனது தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார்.
கடந்த 11ம் தேதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவனை அருகே விஸ்வநாதன்(வயது46) என்ற பழங்குடியினத்தவர் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கண்டுபிடிக்ப்பட்டார். அவரின் மனைவி மகப்பேற்றுக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி நேற்று இரவு கோழிக்கோடு விமானநிலையம் வந்து சேர்ந்தார். ின்று காலை காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
Uddhav Thackeray :மோடியின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியதே பால் தாக்ரேதான்! உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
விஸ்வநாதன் குடும்பத்தினருடன் பேசிய ராகுல் காந்தி அவர்களின் குறைகளையும், தேவைகளையும், புகார்களையும் கேட்டறிந்தார்.
கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி போலீஸார் கூறுகையில் “ விஸ்வநாதன் தூக்கில் தொங்கியது தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஸ்வநாதன் குடும்பத்தினர் அளித்த புகாரில், சிலர் விஸ்வநாதனைகடந்த 9ம் தேதி முதல் தொந்தரவு செய்துவந்த நிலையில் திடீரென காணவில்லை.
ஆனால், 11ம் தேதி மருத்துவக் கல்லூரி அருகே தூக்கில் விஸ்வநாதன் கண்டுபிடிக்கப்பட்டார்.
விஸ்வநாதன் திருடிவிட்டார் என்று கூறி சிலர் அவரை துன்புறுத்தியுள்ளனர் என்று குடும்பத்தினர்புகாரில் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
பாரத் ஜோடோ யாத்திரை முடித்தபின் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி வருவது இதுதான் முதல்முறையாகும். கேரளாவுக்கு ராகுல் காந்தி வந்தவுடன் அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்று இரவு உற்சாக வரவேற்பு அளித்தனர்.