Uddhav Thackeray :மோடியின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியதே பால் தாக்கரேதான்! உத்தவ் தாக்கரே பாய்ச்சல்
பிரதமர் மோடியை மட்டும் அன்று என் தந்தை பால் தாக்கரே காப்பாற்றாமல் இருந்திருந்தால், இன்று இவ்வளவு தூரம் அவரால் அரசியலில் பயணித்திருக்க முடியாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை மட்டும் அன்று என் தந்தை பால் தாக்கரே காப்பாற்றாமல் இருந்திருந்தால், இன்று இவ்வளவு தூரம் அவரால் அரசியலில் பயணித்திருக்க முடியாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று வடஇந்தியர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜகவின் அரசியல் தலைமையை 25 முதல் 30 ஆண்டுகளாகப் பாதுகாத்தது சிவசேனா கட்சிதான். எங்களை வைத்து குளிர்காய்ந்ததும் பாஜகதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சிவசேனாவையும், அகாலி தளத்தையும் ஒதுக்கிவிட்டார்கள்.
நான் பாஜவுடனான நட்பை முறித்தாலும், இந்துத்துவாவை நான் கைவிடவில்லை. பாஜக இந்துத்துவா அல்ல, இந்துத்துவா என்ன என்பதற்கு பாஜகவினர் பதில் அளி்க்க வேண்டும். ஒருவொருக்கொருவர் வெறுப்பது இந்துத்துவா அல்ல.
இந்துக்களுக்கு இடையே குழப்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை பாதுகாத்தது பாலசாஹேப் பால்தாக்கரே தான். ராஜ்தர்மத்தை அடல்பிஹாரி வாஜ்பாய் மோடியிடம் இருந்து எதிர்பார்த்தார்.
14-வது விமான மற்றும் பாதுகாப்பு தொடர்பான Aero இந்தியா கண்காட்சி: பிரதமர் மோடி இன்று தொடக்கம்
அந்தநேரத்தில், பால்தாக்கரே தலையிட்டு, அந்த நேரத்துக்கான தேவையை எடுத்துரைத்தார். பால் தாக்கரே மட்டும் தலையிட்டு மோடியைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், மோடி இந்த அளவு தொலைவு வந்திருக்கமாட்டார்.
பால்தாக்கரே ஒருபோதும் வெறுப்புடன் இருந்ததும் இல்லை, பரப்பியதும் இல்லை. இந்துக்கள் என்பவர்கள் மராத்தியர்கள் மட்டும்அல்ல, வடஇந்தியர்களை வெறுப்பவர்களும் அல்ல. மதத்தை அடிப்படையாக வைத்து தேசத்தை எதிர்ப்போருக்கு எதிராக பால்தாக்கரே இருந்தார்
எனது மரியாதையைக் காப்பாற்றவே பாஜக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன். 2019ல் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் அமைத்தோம்.
இல்லாவிட்டால் என் கழுத்தில் அடிமைப்பட்ட சுற்றப்பட்டிருக்கும், என்னுடைன் இருந்தவர்கள் கழுத்தில் இப்போது சுற்றப்பட்டுள்ளதே அந்தப் பட்டைபோல் எனக்கும் இருந்திருக்கும்.(ஏக்நாத் ஷிண்டேவை குறிப்பிட்டு தாக்கினார்)
நான் வடஇந்தியர்களைச் சந்திக்கும்போதும், முஸ்லிம்களைச் சந்திக்கும் போதும் விமர்சிக்கப்படுகிறேன், இந்துவாவை கைவிட கோரப்படுகிறேன். மும்பைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி வந்தபோது, யார் அவருக்கு சமையல் செய்தது. நான் செய்திருந்தால் நான் இந்துக்களுக்கு எதிரானவன் எனச் சொல்லப்பட்டிருப்பேன்
தமிழகத்தை பின்பற்றுகிறதா பாஜக? திரிபுராவில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்!
ஆனால், மோடி செய்திருந்ததால், அவருக்கு பெரிய இதயம் இருப்பதாகக் கூறப்பட்டது. நான் ஒருபோதும் போரா முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவன் இல்லை என்பதை கூறிக்கொள்கிறே்ன்
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்