rajnath singh meeting with sonia gandhi
பாஜக சார்பில் அறிவிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாஜக அமைச்சர்கள் சந்தித்தள்ளனர்.
அடுத்த மாதம் 17ம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்பாளரை அறிவிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, அருண்ஜெட்லி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியறுத்தி பாஜக தேர்தல் பணி குழுவினர், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளனர்.
ஏற்கனவே பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அதனை வெளியிடவில்லை
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், லாலு பிரசாத், மாயாவதி, மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால்,இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் இழுப்பறி நீடித்து வருகிறது.
இந்த வேளையில் தாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்கும்படி கேட்டு பாஜக தேர்தல் பணி குழுவினர் சோனியா காந்தியை சந்தித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
