Asianet News TamilAsianet News Tamil

ஆத்ம நிர்பார் பாரத் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது… மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!!

பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கொள்கைகள் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

rajeev chandrasekhar tweet about atma nirbhar bharat
Author
India, First Published Jan 26, 2022, 6:41 PM IST

பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கொள்கைகள் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத் திட்டம். ஆத்ம நிர்பார் பாரத் என்னும் விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி 12-05-2020 அன்று அறிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான ஐந்து தூண்களாக  பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம், துடிப்புள்ள ஜனநாயகம் மற்றும் தேவைகள் ஆகியவற்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

rajeev chandrasekhar tweet about atma nirbhar bharat

இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுக்குறித்து பேசிய பிரதமர் மோடி, தொழில்துறையை மேம்படுத்தி, தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தைப் போக்குவதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்புகள் அடங்கியது இந்தத் திட்டம் என அறிவித்தார்.

 

இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கொள்கைகள் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த குடியரசு தினத்தன்று குடியரசு தினம் மட்டுமின்றி புதிய இந்தியாவையும் கொண்டாடுகிறோம். பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் கொள்கைகள் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்த வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios