Asianet News TamilAsianet News Tamil

கார்த்தி சிதம்பரம்…தொடர்ந்து பீட்டர் முகர்ஜி வீட்டிலும் ‘ரெய்டு’கைதுக்கு ரெடியாகும் சி.பி.ஐ.

raid in peter mugarji house
raid in-peter-mugarji-house
Author
First Published May 16, 2017, 5:49 PM IST

ஐ.என்.எக்ஸ் ஊடகம் அன்னிய முதலீடு  பெற அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பான குற்றச்சாட்டில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மகன் வீடுகளில் நேற்று நடந்த ரெய்டு போல், ஐ.என்.எக்ஸ். ஊடக அதிபர் பீட்டர் முகர்ஜியின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

raid in-peter-mugarji-house

அனுமதிபெற

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்றுக் கொள்ள மத்தியஅரசின் அனுமதியைப் பெற ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம் உதவியதாக சி.பி.ஐ. குற்றச்சாட்டு கூறியுள்ளது.

முறைகேடு

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். நிறுவனம் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் பெற கார்த்தி சிதம்பரம் உதவி செய்துள்ளார் இதற்காக பல கோடிகளில் கார்த்திக் சிதம்பரம் லஞ்சம்பெற்றார் என்று சி.பி.ஐ. குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளது.

raid in-peter-mugarji-house

வழக்குப்பதிவு

இது தொடர்பாக கார்த்திக் சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அட்வான்டேஜ்ட ஸ்டிராடஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநர் பத்மா விஸ்வநாதன் ஆகியோர் மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. 

சிதம்பரம் பெயர்

மேலும், இதில் ப.சிதம்பரத்தின் பெயரும் போலீஸ் புகாரில் சேர்க்கப்பட்டு இருந்தபோதிலும், அவர் மீது வழக்குபதிவு செய்யப்படவில்லை.

திடீர் ரெய்டு

இதையடுத்து,  சென்னை, டெல்லி, மும்பை, குர்கான், கரைக்குடி ஆகிய இடங்களில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சி.பிஐ. சோதனை

அதேசமயம், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பீட்டர் முகர்ஜியின் வீடுகளிலும் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள போஷ்வோர்லியில் இருக்கம் பீட்டர் முகர்ஜியின் சொகுசு பங்களாவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இதற்கிடையே ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக பீட்டர் முகர்ஜி தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios