10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி; 5000 அமெரிக்கவாழ் இந்தியர்கள் முன் பேசுகிறார்

ஜூலை 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்பாக வரும் 31ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் செல்கிறார்.

Rahul Gandhi to visit US on May 31 for 10 days ahead of PM Modi's state visit

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின்போது, ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன் அவர் பேச உள்ளார்.

மேலும், அவர்களுடன் ராகுல் காந்தி குழு விவாதத்திலும் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார். மேலும் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவிற்குச் செல்லும் அவர் அந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தொழில்முனைவோரைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.

பிரதமர் மோடி ஜூலை மாதம் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லவுள்ள நிலையில், அதற்கு முன் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணம் செல்கிறார். இது பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லும் முதல் அரசுமுறைப் பயணம் ஆகும்.

ஜூன் 22ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து

Rahul Gandhi to visit US on May 31 for 10 days ahead of PM Modi's state visit

இதற்கு முன் நவம்பர் 2009 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அவருக்கு  விருந்தளித்தார். பின் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடர் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரானை அரசுமுறைப் பயணமாக வரவேற்று விருந்தளித்தார். அதுவே பைடன் பதவியேற்றதும் வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த ஒரே அரசு விருந்து ஆகும்.

அதனை பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். பிரதமரின் பயணம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான நட்பின் பிணைப்பை உறுதிப்படுத்துவதாக அமைய உள்ளது. "இந்தப் பயணத்தில் பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் கூட்டான செயல்பாட்டை வலுப்படுத்தும்" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் கூறினார்.

சமீபத்தில் லண்டனில் பேசிய ராகுல் காந்தி, இந்திய அரசை விமர்சித்து இந்திய ஜனநாயகத்தின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மார்ச் 2023 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது உரையின் போது, இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் அதன் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து காந்தி கவலை தெரிவித்தார். ஆளும் பாஜகவினர் இந்தக் கருத்துகளை விமர்சித்தனர். அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரினர்.

ஆனால், ராகுல் காந்தி மன்னிப்பு கோர மறுத்த நிலையில், அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பெர்க் அறிக்கையை முன்வைத்து பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பிரதமர் பதில் கூறவில்லை. இதனிடையே, சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு மறுநாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பறக்க முடியாமல் ஓடுதளத்தில் சிக்கிய விமானப்படை விமானம்! லே விமானங்கள் அனைத்தும் ரத்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios