பறக்க முடியாமல் ஓடுதளத்தில் சிக்கிய விமானப்படை விமானம்! லே விமானங்கள் அனைத்தும் ரத்து

இந்திய விமானப் படையின் சி-17 குளோபல்மாஸ்டர் (C-17 Globemaster) சேவைத்திறன் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Indian Air Force's C-17 Globemaster Stuck At Leh Runway, Flights Cancelled

இந்திய விமானப் படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதன் தனி ஓடுபாதையில் சிக்கியிருக்கிறது. இதனால் லே விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சி-17 குளோபல்மாஸ்டர் (C-17 Globemaster) சேவைத்திறன் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையால் விமானம் ஓடுபாதை புறப்படுவதோ தரையிறங்குவதோ நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஓடுபாதை நாளை காலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல பயணிகள் நாளை பயணிப்பதற்கான விமானங்கள் இல்லை என்று ட்விட்டரில் புகார் தெரிவித்தனர். ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உட்பட பல விமான நிறுவனங்கள் ட்விட்டரில் பதிவிட்ட பயணிகளை அணுகி பிரச்சினையை விளக்கியுள்ளன.

Indian Air Force's C-17 Globemaster Stuck At Leh Runway, Flights Cancelled

ஒரு ட்விட்டர் பயனர், "இந்திய விமானப்படை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று சண்டிகரில் இருந்து லே செல்லும் எனது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நான் நாளை வேறு விமானத்தில் பயணிக்கலாம் என விமான நிலையத்தில் கூறினர். இப்போது மே மாதம் 23ஆம் தேதி வரை விமானங்கள் இல்லை என்று வாடிக்கையாளர் சேவை மையம் தெரிவித்துள்ளது." என்று ட்வீட் செய்தார்.

மற்றொரு பயனர் தனது விமானம் ரத்துசெய்யப்பட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றும் புகார் கூறினார். இன்னொருவர், லேக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் தான் டெல்லி விமான நிலையத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"துரதிர்ஷ்டவசமாக இண்டிகோ விமானப் பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். இண்டிகோவின் லே செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன! இண்டிகோ எங்களை நாளை அழைத்துச் செல்வதாகக் கூறிவில்லை, தங்க வைக்கவும் முன்வரவில்லை" என்று அந்தப் பயனர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios