பிக்பாக்கெட் வழக்கு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ராகுல் காந்தியின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள டெல்லி நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

Rahul Gandhi's 'pickpocket' remark for PM: Court directs poll panel to 'act' sgb

கடந்த நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை "பிக்பாக்கெட்" என்று விமர்சித்தார். அவரது இந்தப் பேச்சை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி ஆகியோரை "பிக்பாக்கெட்" என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்காக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மினி புஷ்கர்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Rahul Gandhi's 'pickpocket' remark for PM: Court directs poll panel to 'act' sgb

அப்போது, ராகுல் காந்தியின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய பேச்சுகளுக்கு எதிராக கடுமையான விதிகளை வகுக்க, நாடாளுமன்றத்திற்கு அறிவுறுத்த முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது..

நவம்பர் 23ஆம் தேதியே ராகுல் காந்தியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததகாவும் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விசாரணையின்போது, ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மழை பாதிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் 5வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios