rahul gandhi yatra:ராகுல் காந்தி தங்கும் கேரவேன் எப்படி இருக்கும்? மற்ற தலைவர்களுக்கு வசதிகள் எப்படி?
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வரும்நிலையில் அவர் தங்குவதற்கும், மூத்த தலைவர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமான கன்டெய்னர்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்று வரும்நிலையில் அவர் தங்குவதற்கும், மூத்த தலைவர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமான கன்டெய்னர்கள் வந்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியுள்ளார். ஏறக்குறைய 150 நாட்கள் செல்லும் யாத்திரையில் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து ராகுல்காந்தி 3,570 கி.மீ தொலைவு நடைபயணம் மேற்கொள்ளவார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்த யாத்திரை நடக்கிறது.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான காங்கிரஸ்தொண்டர்கள், நிர்வாகிகள், பங்கேற்கிறார்கள். இதில் ராகுல் காந்தியுடன் 230க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கடைசி வரை செல்கிறார்கள்.
ராகுல் காந்தி இரவுநேரத்தில் தங்கவும், காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கவும் 60 கன்டெய்னர் கேரவேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் ராகுல்காந்தி நடைபயணத்தில் எந்த இடத்தில் தங்க உள்ளாரோ அங்கு நிறுத்தப்படும்.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..? ராகுல் காந்தி கூறிய பதில் என்ன..?
இதில் ராகுல் காந்தி தங்கும் கன்டெய்னர் கேரவேன்கள் நட்சத்திர அறைபோன்று மாற்றப்பட்டுள்ளது. சொகுசு மெத்தை, ஏசிவசதி, கழிவறை மற்றும் குளியலரை வசதி, மின்விசிறி, ஹீட்டர் வசதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கேரவேன்களில் இருவர் மட்டுமே தங்க முடியும்.
மூத்த நிர்வாகிகள்,முக்கிய நிர்வாகிகள் தங்கும் கேரவேன்களில் 6 முதல் 12 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த தலைவர்கள், ராகுல் காந்தி தங்கும் கேரவேன்களில் மட்டுமே ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற கேரவேன்களில் மின்விசிறி மற்றும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா பாதுகாப்பில் அத்துமீறல்: மும்பையில் ஒருவர் கைது: போலீஸார் விசாரணை
ஆனால் அனைத்து கேரவேன்களிலும் கழிவறை மற்றும் குளியல்அறை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த கேரவேனிலும் தொலைக்காட்சி வசதி இல்லை.ஒட்டுமொத்தமாக 60 கேரவேன்களில் 230 பேர் தங்க முடியும்.
இந்த கேரவேன்கள் அனைத்தும் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து டாடா டிரக் மூலம் தனியார் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.