amit shah security: அமித் ஷா பாதுகாப்பில் அத்துமீறல்: மும்பையில் ஒருவர் கைது: போலீஸார் விசாரணை
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிஅமைத்தபின் முதல்முறையாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பில் அத்துமீறல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறிச் சென்ற ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிஅமைத்தபின் முதல்முறையாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பில் அத்துமீறல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறிச் சென்ற ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் இதுவரை சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு ஆட்சியில் இருந்தபோது பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மும்பைக்கு வரவில்லை. சமீபத்தில் மகாவிகாஸ் அகாதி அரசு கவிழ்ந்தபின், பாஜக தலைமையிலான ஆட்சிஅமைந்தது.
அடிப்படை கணிதத் திறனில் தமிழக மாணவர்கள் மிகமோசம்: என்சிஆர்இடி ஆய்வில் தகவல்
முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றபின் முதல்முறையாக அமித் ஷா மும்பைக்கு வந்துள்ளார். அப்போது, மும்பையில் அமித் ஷாவின் பாதுகாப்பில் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரித்தபோது அவர் பெயர் ஹேமந்த் பவார் என்பதும், ஆந்திரபிரதேச எம்.பியின் உதவியாளர் என்பதும் தெரியவந்துத. உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும்போது, உள்துறை அமைச்சக அடையாள அட்டையை அணிந்து அப்பகுதியில் வலம் வந்தார்.
நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி 6 % குறைந்தது: டாப்-50யில் இருவர்: உ.பி. முதலிடம்
இதைப் பார்த்து சந்தேகமடைந்த, உள்துறை அமைச்சக அதிகாரிகள், அவரைப் பிடித்து மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த மும்பை போலீஸார் 5நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்தபோது அவர் பெயர், அமித் ஷா பாதுகாப்பு பட்டியலில் இல்லை என்பதாலும், போலியான அடையாள அட்டையை அணிந்திருந்தார் என்பதாலும் அவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.