ncert: அடிப்படை கணிதத் திறனில் தமிழக மாணவர்கள் மிகமோசம்: என்சிஆர்இடி ஆய்வில் தகவல்

அடிப்படைக் கணிதத் திறனில் தமிழக மாணவர்கள் மிகவும் மோசமாக உள்ளனர்.அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம், குஜராத் மாணவர்கள் உள்ளனர் என்று என்சிஇஆர்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Students in Tamil Nadu had the lowest basic numeracy scores; Assam and Gujarat are next: NCERT study

அடிப்படைக் கணிதத் திறனில் தமிழக மாணவர்கள் மிகவும் மோசமாக உள்ளனர்.அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், அசாம், குஜராத் மாணவர்கள் உள்ளனர் என்று என்சிஇஆர்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்சிஇஆர்டி சார்பில் “ தேசிய அளவில் எண்கள் மற்றும் பாடங்களை சரளமாக வாசித்தலில் திறன்” குறித்து ஆய்வுநடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகளை என்சிஇஆர்டி வெளியிட்டது. 

இந்த ஆய்வின் நோக்கம் என்பது, 3-ம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் மற்றும் கற்றலை மதிப்பிட முடியும், என்பதை அறிய, நம்பகமான மற்றும் சரியான புள்ளிவிவரங்களை வழங்குவதாகும்.

நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி 6 % குறைந்தது: டாப்-50யில் இருவர்: உ.பி. முதலிடம்

Students in Tamil Nadu had the lowest basic numeracy scores; Assam and Gujarat are next: NCERT study

மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம் மற்றும் பீகார்  ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு போதுமான அறிவும்,திறமையும் இருக்கிறது, அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், குழப்பமான, கடினமாஇலக்குகளை அடையவும் திறமை இருக்கிறது.

இந்தியா மோசமான பொருளாதார பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை

இந்தஆய்வு 8 மொழிகளில் நடத்தப்பட்டது. 3 ஆம் வகுப்பில் உள்ள குழந்தைகளில் கால் பகுதிக்கும் அதிகமானோரின் வாசிப்புத் திறன் மதிப்பிடப்பட்டது. அதில் அவர்களின் திறன் சர்வதேச அளவில் சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறது என்பது தெரியவந்தது

3ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 37சதவீதம் பேருக்கு கற்பவர்களுக்கு குறைந்த அறிவு மற்றும் திறன்கள் இருப்பதாகவும், அவர்களால் அடிப்படை கிரேடு-லெவல் பணிகளை ஓரளவு முடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. 

Students in Tamil Nadu had the lowest basic numeracy scores; Assam and Gujarat are next: NCERT study

தமிழில் பயிலும் மாணவர்களில் 42 சதவீதம் குழந்தைகளுக்கு அடிப்படை வாசித்தல் திறனே இல்லை. ஒருநிமிடத்துக்கு மாணவர் ஒருவர் 16 வார்த்தைகளும்,மாணவி 18 வார்த்தைகளும் சராசரியாக படிக்கின்றனர்.

ஆனால், காசி, பெங்காலி, மிசோ, பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் மொழிகளைப்படிக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பு திறன் சரளமாக இருக்கிறது.

neet 2022 ug: tanishka: நீட் தேர்வு முடிவுகள்:தமிழகம் எப்படி? ராஜஸ்தான் மாணவி முதலிடம்: 9.93 லட்சம் பேர் பாஸ்

எண்ணியல் மற்றும் அடிப்படை கணிதவியலைப் பொறுத்தவரை, மாணவர்களிடம் எண்களை அடையாளம் காட்டுதல், கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் ஆகிய திறன் பரிசோதிக்கப்பட்டது. 

11 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதத்திறனையே முழுமையாக நிறைவுசெய்யவில்லை. 37 சதவீதம் பேர் பகுதி அளவே அடிப்படை கணிதத்திறனில் தேறியுள்ளனர். 42 சதவீதம் பேர் அடிப்படை கணித்திறனில் தேறியுள்ளனர். 10 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அதிகபட்ச திறனுடன் உள்ளனர்.

Students in Tamil Nadu had the lowest basic numeracy scores; Assam and Gujarat are next: NCERT study

இந்த ஆய்வின் முடிவில் 52 % மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் கீழாகவேஉள்ளனர், 40 சதவீதம் பேர் 70 முதல் 83 மதிப்பெண்களும்பெற்றுள்ளனர்.  இந்த குழந்தைகள் மட்டுமே வெற்றிகரமாக அடிப்படை பரிசோதனைத் திறனில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10% மாணவர்கள் மட்டுமே 84 மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மத்திய கல்வித்துறை அமைச்சகம், கடந்த 2021, ஜூலையில் தேசியஅளவிலான புரிதல் மற்றும் எண்களை வாசித்தல் திட்டத்தை(nipun) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் 2026-2027ம் ஆண்டுக்குள் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளை தயார் செய்வதாகும். குழந்தைகளின் அடிப்படை கல்வித்திறன், எண்ணியல்திறனை மேம்படுத்த, அடிப்படை கட்டமைப்பு கல்வி திட்டத்தை கடந்தமார்ச் மாதம் மத்திய கல்வி அமைச்சகம் என்சிஇஆர்டி இணைந்து தொடங்கியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios