rahul gandhi yatra: இந்தியா மோசமான பொருளாதார பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை
இந்தியா மோசமான பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவுகள் வரப்போகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மோசமான பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவுகள் வரப்போகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற நடைபயணத்தை இன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார். மொத்தம் 150நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்குச் செல்கிறார். கன்னியாகுமரியில்இருந்து இந்த நடைபயணத்தை ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் சூழல்! உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்லும்: அசோக் கெலாட் எச்சரிக்கை
அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கிழக்கு இந்தியா கம்பெனி நாட்டை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. இப்போது 3 அல்லது 4 நிறுவனங்கள் அதைப்போல் செய்து வருகின்றன. இன்று இந்தியா மோசமான இதுவரை இல்லாத பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதிகபட்சமான வேலையின்மை நிலவுகிறது, இதுவரை நாம் பார்த்தது இல்லை. இந்த தேசம் பேரழிவை எதிர்நோக்கி இருக்கிறது
துரதிர்ஷ்டமாக ஊடகத்தில் உள்ள நமது நண்பர்களும்கூட கட்டுப்படுத்தப்படுகிறார்கள். நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து ஒவ்வொருவருக்கும் புரிந்திருக்கும். யாருமே வேலையின்மை சூழலையோ அல்லது விலைவாசி உயர்வு பிரச்சினையையோ தொலைக்காட்சியில்பார்க்க முடியாது. பிரதமர் தோற்றத்தை மட்டும்தான் பார்க்க முடியும்.
விவசாயிகள், தொழிலாளிகள், சிறு, குறு நடுத்தர வர்த்தகர்கள் மீது அமைப்பு ரீதியாக பாஜக அரசு தாக்குதல் நடத்துகிறது. இன்று ஒட்டுமொத்த தேசத்தையும் குறிப்பிட்ட சில பெரு நிறுவனங்கள்கட்டுப்படுத்துகின்றன. துறைமுகம், விமானநிலையங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு நிறுவனத்தையும் சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன.
அவர்களின் ஆதரவு இல்லாமல் ஒருநாள் பிரதமர் தோல்வி அடைவார். அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி, பிரதமர் 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இதற்கு மாற்றமாக, பிரதமர் அவர்களின் நலன் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துகிறார்.
பணமதிப்பிழப்பு, தோல்வி அடைந்த ஜிஎஸ்டி முறை, வேளாண் சட்டங்கள் ஆகியவை அனைத்தும் சில தொழிலதிபர்கள் பயன் அடைவதற்காக கொண்டு வரப்பட்டவை.
ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே உத்தியே எளிதாகப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவைப் பிரித்து, மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைத்து, அதன்பின் மக்களிடம் இருந்து திருடுவது ஆங்கிலேயர்கள் திட்டமாக இருந்தது.
யாத்திரை தொடங்கிய நேரத்தில் சோனியாகாந்தியிடம் இருந்து வந்த ‘மெசேஜ்’ - இதென்னப்பா கடைசியில் ட்விஸ்ட்
அதைசெயல்படுத்துகிறார்கள். அந்த காலத்தில் நாம் கிழக்கு இந்தியா கம்பெனி என்று அழைத்தோம், இப்போது, ஒரு பெரிய நிறுவனம் தேசத்தையே கட்டுப்படுத்தி வருகிறது. 3 அல்லது 4 பெரிய நிறுவனங்கள் தேசத்தையே கட்டுப்படுத்துகின்றன
இந்திய மக்களின், ஏழைகளின் எதிர்காலத்தைப் பறிக்கவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பாஜகவின் கொள்கைகளால் சிறு, மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளால் வாழமுடியவில்லை.
இந்தியாவில்இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புஉருவாக்குவது சாத்தியமற்றது. இளைஞர்கள் ஊதியம் ஈட்டாதபோது விலைவாசி உயரத்தான் செய்யும். ஆதலால் நம்முன் மோசமான காலம் காத்திருக்கிறது
மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது முக்கியமானது, அதைச் செய்து இந்தியாவை வலிமைப்படுத்துவோம். இதுதான் பாரத் ஜோடோ யாத்திரையின்நோக்கம்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்