ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நிவாரணம் கிடைக்குமா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

Rahul Gandhi Goes To Gujarat High Court After No Relief In Defamation Case

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த ராகுல் காந்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு திருடர்களின் பெயர்கள் எல்லாம் மோடி என்று முடிவது ஏன்? எனப் பேசினார்.

இந்தப் பேச்சைக் கண்டித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்ற மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்தத் தீர்ப்பு அவதூறு வழக்கில் அளிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாகும். இதனால், மறுநாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

டெல்லி மதுக்கொள்கை ஊழல்: முதல் முறை குற்றப் பத்திரிகையில் மனிஷ் சிசோடியா பெயர் சேர்ப்பு

Rahul Gandhi Goes To Gujarat High Court After No Relief In Defamation Case

சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும் குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரி இருந்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியா தரப்பில் ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினரை 21ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்று கூறியதற்காக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  2014ஆம் ஆண்டு தானேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை குற்றம்சாட்டிப் பேசினார் என்பதற்காக அவதூறு வழக்கு போடப்பட்டது.

2015ஆம் ஆண்டு அசாமில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தன்னை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர் என்று தெரிவித்தார். இது குறித்தும் போரா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவை போல ராகுல் காந்தி மீது மொத்தம் 10 அவதூறு வழக்குகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டேட் வங்கியா? போஸ்ட் ஆபீசா? நிரந்தர வைப்புநிதி சேமிப்புக்கு சிறந்தது எது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios